பொன் சிவகுமாரன் அண்ணா நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.
சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.
0 Responses to தமிழீழ மாணவர் எழுச்சி நாள்