Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமிருப்பதால் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதனைக் காண்காணிக்கும் பொருட்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை அரசாங்கமோ, தேர்தல் ஆணையாளரோ அழைக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான சுயாதீன அமைப்பு (கஃபே) கோரியுள்ளது.

மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் வடக்கு மாகாணத்தின் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகவே இருக்கிறது. அப்படியானதொரு நிலையில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலொன்று நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தேர்தல் மோசடிகள் அதிகளவில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்களே இருக்கின்றது என்று கஃபே அமைப்பின் நிர்வாக இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.

 கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்து வாக்காளர் பதிவு புத்தகத்தை இராணுவத்தினர் ஏற்கனவே சேகரித்திருந்தனர். இதனால், சுதந்திரமான வாக்களிப்பதிலிருந்து மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம். எனவே, வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைக்கவேண்டிய தேவை அதிகமுள்ளது என்று ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமிருப்பதால் தேர்தல் மோசடி ஏற்படலாம்: கஃபே அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com