Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”





தருமபுரி இளவரசன் மரணம் குறித்து தனிநபர் கமிஷன் அமைத்து விசாரிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, தர்மபுரியில் காதல் செய்து கலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி இளவரசன், திவ்யா. இந்தகலப்புத் திருமணத்தால் தர்மபுரியில் ஜாதிக் கலவரம் கொழுந்து விட்டு எரிந்தது. சில  மாதங்கள் வரையும் கூட அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திவ்யாவின் தந்தை அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மனமுடைந்து போன திவ்யா, தாயைப்பார்க்க வந்தவர், தாயுடனே தங்க விருப்பம் என்றும் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் சென்னை உய்யார் நீதிமன்றத்தில் கூறிவிட்டார். திவ்யா இப்படி கூறிய மறுநாளே இளவரசன் தருமபுரி ரயில் தண்டவாளம் அருகில் பிணமாக கிடந்தார்.

இளவரசன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருத்து நிலவி வந்த நிலையில், இளவரசன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவனது சாவில் மர்மம் உள்ளது. எனவே, சிபிஐ விராசனைக்கு உத்தரவிட வேண்டும் என்று, இளவரசனது தந்தை கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இளவரசன் மரணம் தனது மனதை மிகவும் வாட்டி வதைத்து விட்டது என்று கூறியுள்ளார். மேலும் இளவரசன் தந்தை இளங்கோவனுக்கு ஆறுதல் கூறியுள்ள ஜெயலலிதா, இளவரசன் மரணம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இளவரசன் மரணம் தனது மனதை மிகவும் வாட்டி வதைத்து விட்டது என்று கூறியுள்ளார். மேலும் இளவரசன் தந்தை இளங்கோவனுக்கு ஆறுதல் கூறியுள்ள ஜெயலலிதா, இளவரசன் மரணம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி எம்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க தனிநபர் கமிஷன் அமைக்க முதல்வர் உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com