Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் பதவியை ஏற்பதற்கு  சவுதி அரேபியா மறுத்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையில் மொத்தமுள்ள 15 இடங்களில்  ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளையும் தவிர மீதமுள்ள 10 இடங்களுக்கு சுழற்சி முறையில் இரு வருடங்களுக்கு ஒரு முறை 10 நாடுகளுக்கு பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவி வழங்கப்படும். இந்த ஆண்டு சிலி, சாத், லிதுவேனியா, நைஜீரியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தற்காலிக உறுப்பினராவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக சவுதி அரேபியாவுக்கு இதுவே முதன்முறையாக ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கத்துவராகும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் பல விடயங்களில் பாதுகாப்பு கவுன்சில் இரட்டைத் தன்மை கடைப்பிடிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள சவுதி அரேபியா, சிரியாவில் மக்கள் படுகொலைகளை மௌனமாக வேடிகை பார்த்ததாகவும், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு இன்னமும் தீர்வில்லை.. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்ட நிலை தொடர்வதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையே காரணம் எனக்கூறி ஐ.நா பாதுகாப்பு சபையில் உறுப்பினர் ஆவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் பதவியை ஏற்க சவுதி அரேபியா மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com