உத்தரபிரதேசத்தின் உன்னாவோ கோவிலுக்கு அருகில் தங்கப்புதையல் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது கல்லறைக்கு அடியில் 1000 டன் தங்கப் புதையல் ஆபரணமாக உள்ளது என்று, 19ம் நூற்றாண்டில் உத்தர பிரதேச மாநிலத்தை ஆண்ட மன்னர்களில் ஒருவரான ராவோ ராம் பக்ஸ் சிங், தனது கனவில் வந்து கூறியதாக அக்கிராமத்தின் சாதுக்களில் ஒருவரான ஷோபன் சர்க்கார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் சாதுவின் கனவின் படி உடனடியாக குறித்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள்ப்படும் என கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், ஒருவேளை வேறு எவரேனும் இம்முயற்சி மேற்கொண்டால் தங்கம் திருட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் இதைக் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியது.
இதையடுத்து தங்கப்புதையல்களை தேடும் பணி உன்னாவில் தீவிரமடைந்துள்ளது. ஆனால் கனவில் வந்து சொன்னதாக கூறும் ஒரு சாதுவின் பேச்சை நம்பி மத்திய அரசு தங்கம் தேட முயற்சிக்கிறதா என பாஜக மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேலி செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் இக்கனவுகளின் படி இத்தேடுதல்களை தொடங்கவில்லை. ஏற்கனவே தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு கிடைத்த சந்தேகத்துக்கிடமான புள்ளிவிபரத் தகவல்களின் படியே அவ்விடத்தில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 12 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு தற்சமயம் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருவதாகவும் உத்தரப்பிரதேச கலாச்சாரத் துறை அறிவித்துள்ளது. அங்கு புதையலைத் தேடும் கோட்டை அருகே ஏராளமான மக்கள் குவிந்து உள்ளனர். கிட்டத்தட்ட பாலிவூட் திரைப்படமான பீப்லி லைவ் பரபரப்பு அங்கு ஏற்பட்டுள்ளது.
இன்னமும் 2-3 வாரங்களின் பின்னரே அங்கு முழுமையான அகழ்வாராய்ச்சி முடிவடையும் எனவும் கூறப்படுகிறது.

0 Responses to சாதுவின் கனவும், தேடப்படும் தங்கப் புதையலும் : உத்தர பிரதேசத்தை பரபரப்பாக்கியுள்ள புதிய செய்தி!