கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஹமிட்
அன்சாரி கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், அது
தொடர்பில் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு
அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இம்முறை பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லை என்றும், அதற்குப் பதிலாக துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி கலந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிடம் பேசியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், அது தொடர்பில் எந்தவித அறிவித்தல்களும் இன்னமும் இந்தியாவிடமிருந்து கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொதுநலவாய மாநாட்டில் இந்திய துணை ஜனாதிபதி கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்படவில்லை