Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 01.10.2103 அன்று இந்தி நடிகர் சஞ்சய் தத் புனே சிறையில் இருந்து பரோலில் வந்தார். 14ஆம் தேதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அனுகி மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீட்டித்தார். இந்நிலையில், சஞ்சய் தத், புதன்கிழமை மீண்டும் புனே சிறைக்குச் சென்றார். புதன்கிழமை காலை 6.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து சஞ்சய் தத் புறப்பட்டார்.

1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது. சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் தண்டனையை அனுபவித்து விட்டார். புணே ஏராவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சஞ்சய் தத்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு சிறைத் தண்டனையைக் குறைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு மகாராஷ்டிர மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பரோல் முடிவு: மீண்டும் சிறையில் நடிகர் சஞ்சய் தத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com