அரசியல் தலையீடுகள் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் இன்று காலைமுதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.ஏற்கனவே அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அவர்களது கோரிக்கைக்கு பதிலளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் கால அவகாசமொன்றை கோரியிருந்தது.எனினும் அக்கால அவகாசத்தினுள் தீர்வெதனையும் தந்திராத நிலைமையினிலேயே அவர்கள் மீண்டும் போராட்டத்தினில் குதித்துள்ளனர். இன்று காலை முதல் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போன்ற ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்த அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1. திடீர் வேலைநிறுத்தத்தினால் நிர்கதியான எமக்கு உரிய தீர்வினை வழங்குங்கள்.
2. எமது வேலையினை தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கு தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள்.
3. இதுவரை காலமும் பல்கலைகழகத்திற்கு விசுவாசமாக உழைத்த எங்களை இடைநிறுத்தி வீதிக்கு அனுப்பியதுதான் தங்கள் நிர்வாகத்தினால் எமக்கு வழங்கப்பட்ட வெகுமதியா ?
4. பல்கலை கழக நிர்வாகமே எமது நிலைமைக்கு உரிய தீர்வினை வழங்குங்கள்.
5. தொழிலாளி வெற்றிடத்திற்கு புதிய வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்பின் போது கடந்த 10 மாதகாலமாக இங்கு பணிபுரிந்த நாங்கள் புறக்கணிப்பது நியாயமானதா ?
6. புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பின்போது எமது பெயர் பட்டியலை சம்பந்தபட்ட அமைச்சிடம் வழங்காமல் நிர்வாகம் எம்மை புறக்கணித்தமை நியாயமா ?
0 Responses to யாழ்.பல்கலையினில் மீண்டும் தொழிலாளர் போராட்டம்!!