வடக்கினில் படைத்தரப்பால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளினில் முளைத்துள்ள நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதிகளிற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள இலங்கை அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.அவ்வகையினில் பொதுநலவாய மாநாட்டிற்காக வருகை தரும் சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ராஜதந்திரிகளை இவ்விடுதிகளிற்கு அழைத்து வரவும் அங்கு தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள தெல்செவன மற்றும் காரைநகரில் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள விடுதி ஏ-9 இலுள்ள பியர் கார்டன் என அனைத்தும் இப்போது தென்னிலங்கை விருந்தினர்களால் நிரம்பி வழிந்து வருகின்றது.இந்நிலையினில் சர்வதேச சுற்றுலாப்பயணிகளும் தற்போது பாதுகாப்பு தரப்பினால் அழைத்து வரப்படுகின்றனர்.
இதற்கு மேலதிகமாக தற்போது சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையினில் பொதுநலவாய மாநாட்டிற்காக வருகை தரும் சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ராஜதந்திரிகளை இவ்விடுதிகளிற்கு அழைத்து வரவும் அங்கு தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .அதற்காக திட்டமிடல்கள் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் வடக்கு-கிழக்கினில் இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக காண்பிக்கவும் முயற்சிகள் தொடர்கின்றன. எனினும் குறித்த பாதுகாப்பு வலய பிரதேசங்களை மக்களிற்கு விடுவிக்க மறுக்கும் படையினர் அவை இராணுவ கேந்திரப்பிரதேசங்களென கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to வடக்கினில் பாதுகாப்பு தரப்பு விருந்தினர் விடுதிகளும் பொதுநலவாய மாநாட்டிற்கு தயார்!!