Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகளே தீர்மானம் எடுப்பார்கள்.

விக்னேஸ்வரன் நாட்டின் ஏனைய முதலமைச்சர்களைப் போன்று செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் சேவையை 24 துண்டுகளாக பிரிக்க அரசாங்கம் தயாரில்லை என உயர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் பொலிஸ் சேவையின் அதிகாரங்களை பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பொலிஸ் திணைக்களம் பிளவடையக் கூடுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

0 Responses to தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது! கோத்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com