அமெரிக்காவின் என்.எஸ்.ஏ உளவுப்பிரிவு உலகத்தின் 35 தலைவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட கதை நேற்றைய செய்தியாகும்.
பல தலைவர்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை தமது அலட்டல்களை ஒட்டுக்கேட்டு அமெரிக்கர்கள் மண்டை கழன்று ஓடியிருப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
மேலும் உலகத்தை இவ்வளவு பெரிய முடர்கூட்டம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்ற அதிசயத்தையும் அமெரிக்கர்கள் அறிந்து குழம்பிக்கிடக்க வாய்ப்புண்டு.
( மூடர் கூடம் திரைப்படத்தில் வரும் பாத்திரங்களுக்கும் உலகின் பெரும்பாலான தலைவர்களுக்கும் அறிவில் அதிக பேதமில்லை என்பதை அந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் உணர முடியும் )
மற்றப்படி இவைகளால் புதுமை எதுவும் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.
இருந்தாலும் இவர்களில் சற்று வேறுபட்டவராக இருக்கிறார், ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல்.
அவருடைய கைத்தொலைபேசி ஒற்றுக்கேட்கப்பட்டது எப்படி..? அவர்கள் சேகரித்த தகவல்கள் எவை..? அதனால் அவர்கள் வைத்த குறி யாது..? அமெரிக்கர்கள் அஞ்சலா மேர்க்கலுடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்க ஆசைப்பட்டது ஏன்..? அவர்களுடைய உள் நோக்கம் யாது..? போன்ற பல விடயங்களை அறிய ஜேர்மனியின் அதி மேற்பட்ட உளவுப்பிரிவு அமெரிக்கா புறப்படுகிறது.
இந்தவிடயத்தை ஒரு கௌரவப் பிரச்சனையாக மேர்க்கல் கருதுகிறார்..
அதேவேளை ஜேர்மனிய ரெலிகொம் இந்த விவகாரத்தில் அதிக கவனமெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஜேர்மனியில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும், வரும் தொலைபேசி உரையாடல்களை மட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறது.
ஆனால் இந்த அறிவிப்பு எவ்வாறு அமெரிக்கர்காவின் என்.எஸ்.ஏ உளவறிதலைக் கட்டுப்படுத்தும் என்பது தெரியவில்லை.
அதேவேளை முதலாம் உலக மகாயுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜேர்மனிய இராஜதந்திரி வொன் பிஸ்மார்க் இதுபோன்ற காரியத்தை செய்து இங்கிலாந்தை நட்டாற்றில் தள்ளியுள்ளதை இப்போது நாம் நினைவுபடுத்த வேண்டும்.
36 இராட்சியங்களாக பிளவுபட்டுக்கிடந்த ஜேர்மனியை ஒன்றிணைத்தபோது பெல்ஜியத்தை இங்கிலாந்திற்கு பரிசாக தருவதாக ஓர் இரகசிய ஒப்பந்தம் செய்து, இங்கிலாந்தை மௌமாக இருக்கும்படி கூறியிருந்தார்.
தனது காரியம் முடிவடைய அந்தக் கடிதத்தை பத்திரிகைகளில் அம்பலப்படுத்தி இங்கிலாந்தை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தினார்.
இதனால் இங்கிலாந்து ஜேர்மனிக்கு எதிராக படையெடுக்க முடியாத அவலம் ஏற்பட்டது, அந்தக் கோபத்தையே முதலாம் உலகப்போரில் பிரிட்டன் காட்டியது, இரண்டாவது உலகப்போரிலும் அவர்கள் கோபம் தணியவில்லை.
அன்று ஜேர்மனி செய்த அதே வேலையை இன்று அமெரிக்கா செய்தால் என்னவாகும்..?
பெல்ஜியத்தை பரிசாக தருவதாகக் கூறியது போல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறித்து மேர்க்கல் கொண்டிருந்த கருத்தும் உரையாடல்களும், இப்போது அமெரிக்கர்களிடம் இருக்கிறதென வைத்துக்கொண்டால்….
பிஸ்மார்க்கைப் போல அவர்களும் அதை அம்பலப்படுத்தினால் என்னவாகும்..?
இப்படியாக வரலாற்றைப் புரட்டிப் போட்டால் 35 தலைவர்களில் மேர்க்கல் மட்டும் துடியாய் துடிப்பது ஏனென்று தெரியவரும்.
அதேவேளை..
அமெரிக்கர்கள் பிரிட்டனில் உள்ள தொலைபேசிகளையும் ஒற்றுக்கேட்டுள்ளார்கள், அதற்குப் பதிலாக பெருமளவு பண உதவியை அமெரிக்காவிடமிருந்து பிரிட்டன் பெற்றுள்ளதாக வேறு சில செய்திகள் கூறுகின்றன.
ஆனால் ஜேர்மனி, பிரான்சிற்கு சல்லிக்காசும் கொடுக்காமல் இலவசமாக ஒற்றிந்துவிட்டார்கள்.
தொடர்கிறது சிக்கல்…
இதற்குள் சிரியாவின் அல் நசுரா போராளிக்குழுவின் பிரதான தலைவரான அபு முகமட் அல்குலானியை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிரிய இராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால் போராளிகள் இதை மறுத்துள்ளார்கள், புதிய தலைவரை தெரியும்வரை பழைய தலைவரின் இறப்பை மறுப்பது போராட்டக்குழுக்களின் இயல்பு என்கிறார் சிரிய விவகார டென்மார்க் ஆய்வாளர் நாஸர் காடர்.
அலைகள்

0 Responses to ஜேர்மனிய உளவுப்பிரிவு அமெரிக்கா பயணமாகிறது