பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு, வணக்கம். (மன்னிக்கவும்.... ஆயுபோவன்!)
"கண்டியின் அடையாளச் சின்னம் - புத்தரின் பல் - என்கிற நிலைமை மாறிவிட்டது. இப்போது, கண்டியின் அடையாளச் சின்னம் - முரளீதரனின் 'பால்' " என்று, கண்டிக்கு வந்திருந்தபோது அங்குள்ள ஒரு நண்பர் சொன்னது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. இன்று, அந்த அடையாளச் சின்னம் அவமானச் சின்னமாக மாறிவிட்ட கொடுமையைப் பொறுக்கமுடியாமல் தான் இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். (தமிழ் எழுத்துக்களை மறந்திருந்தால், தமிழை அட்சரசுத்தமாக உச்சரிக்கும் ஒரே நடிகரான அண்ணன் சந்திரசேகரைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்ளுங்கள்!)
'போர்' என்கிற போலியான பெயரில் இலங்கை அரசு நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலை நடவடிக்கையில் காணாதுபோன தங்களது தந்தையையோ தனயனையோ, கணவனையோ குழந்தையையோ, மகனையோ மகளையோ தேடித் தேடி அலைந்துகொண்டிருக்கும் எங்கள் ஈழச் சகோதரிகளின் கண்ணீரைக் கொச்சைப்படுத்தும் உங்களது லேட்டஸ்ட் தூஸ்ரா பார்த்து அதிர்ந்துபோய்த்தான் இதை எழுதுகிறேன்.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக உலர்ந்தும் உலராத கண்ணீரோடு தங்கள் உறவுகளைத் தேடித் திரிந்து கொண்டிருப்பவர்கள் அந்தச் சகோதரிகள். தங்களது உறவு மலர்கள் உயிர்த்திருக்கின்றனவா உதிர்ந்துவிட்டனவா - என்பதைக்கூட அறியமுடியவில்லை அவர்களால்! சுற்றிலும் ராணுவம் சூழ்ந்து நிற்கிறது. அந்தச் சிங்கள மிருகங்களின் கையில் மட்டுமா ஆயுதம் இருக்கிறது! மெய்யாகவே சொல்கிறேன்...... அவர்கள் மெய்யிலும்! (பேசாப்பொருளையும் பேசவைக்கிறீர்கள் முரளி!)
'எங்கள் உறவுகள் எங்கே' என்று நீதி கேட்டு வீதிக்கு வந்து போராடக் கூட முடியாத நிலை. அப்படிப் போராடினால், காணாமல் போனவர்களுக்காகப் போராடும் சகோதரிகளின் பெயர்களும், அந்த காணாமல் போனோர் பட்டியலில் இணைந்துவிடக் கூடும். காணாமல் போகும் எங்கள் சகோதரிகள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள் என்றா நினைக்கிறீர்கள் முரளி! சிறுகச் சிறுக அவர்களைச் சிதைத்துக் கொல்வது தானே உங்கள் அலரி மாளிகை நண்பர்களின் கொடூரமான ஆயுதம்.
'கற்பழிப்பை ஒரு ஆயுதமாகவே தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது சிங்கள இனவெறி ராணுவம்' என்று கிரெனெடா நாட்டின் கறுப்பினச் சகோதரி கிமாலி பிலிப் சொல்வது உங்கள் கவனத்துக்கு வரவே இல்லையா, முரளி? இலங்கை ராணுவத்தின் பாலியல் பலாத்காரங்கள் விசாரிக்கப் பட்டாக வேண்டும் - என்று பிரிட்டன் வெளிப்படையாக அறிவிப்பது உங்கள் காதில் விழவே இல்லையா?
"வடகிழக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தினரால் அங்குள்ள சிறுமிகள் உள்ளிட்ட சகோதரிகள் அச்சத்துடனேயே வாழவேண்டியுள்ளது.... பாலியல் பலாத்காரம் தொடர்கிறது" என்றெல்லாம் கண்கலங்கச் சொன்ன ஒரு கண்ணியமான பெண்மணியை அறிவீர்களா முரளி? அந்தப் பெண்மணியின் பெயர் - நவநீதம் பிள்ளை.
தமிழ் வம்சாவளியில் பிறந்தவர் என்றாலும், நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்க பிரஜை. நீங்கள் தூக்கிப் பிடிக்கும் இலங்கைக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் பல ஆயிரம் மைல் தூரம். அங்கேயிருந்துகொண்டு எங்கள் சகோதரிகளின் கண்ணீர் ஈரத்தைப் புரிந்துகொள்ள பிள்ளையால் முடிகிறது. இலங்கை மண்ணிலேயே இருந்தும், அந்தக் கண்ணீரின் வலியையும் வேதனையையும் புரிந்துகொள்ள முடியவில்லை உங்களால்! உங்களது சிங்கள சிநேகிதர்கள், பிணங்களைக் கூட புணர்பவர்கள் என்பதையே அறிந்துகொள்ள முடியாத உங்களுக்கு, இதுமட்டும் தெரிந்துவிடப் போகிறதா என்ன?
முரளி! நீங்கள் ஒரு உலக சாதனையாளர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட், ஒருநாள் போட்டிகளில் 500க்கும் மேல் - என்று சாதித்திருப்பவர். சர்வதேச அங்கீகாரம் பெற்றவர் என்கிற அடிப்படையில், சில உண்மைகளை நீங்கள் வெளிப்படையாகப் பேச முடியாது - என்று சொல்கிற நண்பர்கள் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்க முடியாது - என்கிற நயத்தகு நாகரிகம் நியாயமானதாகவே இருக்கட்டும்! கொலைகாரர்களைக் காப்பாற்ற, கொலை செய்யப்படுவோர் மீதே பந்து வீசுகிறீர்களே, அது என்ன நியாயம்?
உலகறிந்த ஒரு விளையாட்டு வீரர் - ஒரு சர்வதேச பிரபலம் - இதைப்பற்றியெல்லாம் பேசமுடியாது - என்றெல்லாம் சொல்கிற மேதாவிகள், நவநீதம் பிள்ளையை யாரென்று நினைத்தார்கள்! அவர், உலகின் உயர் பதவி ஒன்றை வகிப்பவர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர். உலகுக்கே பதில் சொல்லவேண்டியவர். அவசரப்பட்டு எதுவும் பேசிவிட முடியாது அவரால்! அதற்காக, தெருப்பொறுக்கிகள் போலச் செயல்பட்டு சிறுமிகளைக் கூடச் சீரழிக்கும் சிங்கள ராணுவத்தைக் கண்டிக்காமல் இருந்துவிடவில்லை அவர். எவர் வீட்டுக் குழந்தையையோ எவரோ சீரழித்தால் எனக்கென்ன - என்கிற உங்களது மலிவான மனநிலை அந்த மனுஷிக்கு இல்லை முரளி!
உங்களுக்குத் தெரியுமா முரளி.... இலங்கையில் போர் என்கிற பெயரில் சிங்கள இனவெறி ராணுவம் மேற்கொண்ட இன அழிப்பை அம்பலப்படுத்தியதில் நவநீதம் பிள்ளைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்றால், அதை மூடி மறைப்பதில் எங்கள் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த குற்ற உணர்ச்சியோடு தான் கேட்கிறேன்.... இந்தியாவுடன் இணைந்து அந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? நீங்கள் பாட்டுக்கு உங்கள் கிரிக்கெட், உங்கள் தூஸ்ரா - என்று போய்க்கொண்டே இருக்கவேண்டியது தானே!
இலங்கையின் மலையகத் தமிழர் என்றாலும், இந்தியக் குடியுரிமை பெற்ற அயல்நாட்டவர் - என்கிற உரிமையைப் பெற்றிருக்கிறீர்கள் நீங்கள். 'விசா' இல்லாமலேயே நீங்கள் இந்தியாவுக்கு வரமுடியும். உயிர்ப்பலி கேட்கும் தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு கசக்கிப் பிழியப்பட்ட மலையக உறவுகள் அத்தனைப் பேரும் இந்த உரிமையைப் பெறத் தகுதியானவர்களா இல்லையா? இந்த உரிமையை அனுபவித்துவரும் நீங்கள், என்றைக்காவது உங்கள் உறவுகள் இந்த உரிமையைப் பெற குரல்கொடுத்ததுண்டா முரளி!
நீங்கள் ஒரு சுயநலமி - என்று நான் குற்றஞ்சாட்டவில்லை. பொதுநலன் குறித்து கவலைப்படாத ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் - என்று மட்டுமே சொல்லவருகிறேன். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் எங்கள் சகோதரிகள் பற்றிக்கூட கவலைப்படமாட்டேன் - என்கிற அளவுக்கு உங்களை நீங்களே அம்பலப்படுத்தியுள்ள நிலையில் இதைச் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை.
தங்களது உயிரைப் பற்றியும், தாங்கள் எதிர்கொள்ள நேரும் ஆபத்துகள் பற்றியும் கவலைப்படாமல், காணாமல் போன தங்கள் உறவுகளுக்காக ஆண்மையோடும் ஆவேசத்தோடும் நியாயம் கேட்கும் எங்கள் சகோதரிகளின் கால்தூசுக்குக் கூட மதிக்கமுடியாது உங்களது 800 விக்கெட்டையும் 500 விக்கெட்டையும்!
- புகழேந்தி தங்கராஜ் -
கேமரூனின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது, நல்லூரில் திரண்ட சகோதரிகளில் ஒரு சிறுமி இருந்தாளே கவனித்தீர்களா முரளி? "என் அண்ணா எங்கே? பாடசாலைக்குக் கூட போகமுடியாத மனநிலையில் தவிப்புடன் திரிகிறேன்" என்று தன் கைப்பட எழுதிய அட்டையுடன் கண்கலங்க நின்றிருந்தாள் அந்தத் தமிழ்ச் சிறுமி. 'என்னை உன் அண்ணனாக ஏற்றுக்கொள் சகோதரி' என்று நீங்கள் உச்சி முகர்ந்திருந்தால் தமிழ் கூரும் நல்லுலகம் உங்களை மெச்சி மகிழ்ந்திருக்காதா? என்ன செய்வது.... அலரி மாளிகையிலிருந்து பாராட்டுப் பத்திரம் கிடைத்தால்தான் 'எதிர்காலம்' பத்திரமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் நீங்கள்!
நீங்கள் உச்சரித்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் கள்ளிப்பாலில் ஊறவைத்தவை முரளி!
நடந்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காகவும், நடந்தது போர் - என்கிற பொய்யை விதைப்பதற்காகவும் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டுகிறது கொழும்பு. இனப்படுகொலை - என்கிற வார்த்தை தன்னை மட்டுமே குறிவைக்கும் வார்த்தை என்பதால், போர்க்குற்றம் - என்கிற இரு தரப்பைக் குறிவைக்கும் வார்த்தையைப் பரவலாகப் படரவிடுகிறது அது. அதே வார்த்தையைப் பயன்படுத்தி, "போர் என்பதற்கு இரண்டு பக்கம் உள்ளது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" என்கிற விஷத்தைக் கக்குகிறீர்கள் நீங்கள். இதற்கு என்ன அர்த்தம்? பல்லாயிரம் தமிழ்ச் சகோதரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படலாம் - என்றா? ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்படலாம்தான் - என்றா?
போர் என்பதற்கு இரண்டு பக்கம் உள்ளது - என்கிற உங்களது அரிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் கேட்கிறேன், முரளி! நடந்தது போர் என்றே வைத்துக் கொள்வோம். உங்களது சிங்கள சிநேகிதர்கள் எங்கள் சகோதரிகளைச் சீரழித்ததற்கும் சிறுமைப்படுத்தியதற்கும் போர்தான் காரணம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சொல்கிற அந்தப் போரில், ஒரே ஒரு சிங்களச் சகோதரியைக் கூட எங்கள் இனத்தின் விடுதலைப் போரை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவமதித்ததாக இன்றுவரை எவருமே சொல்லவில்லையே........ ஏன்? சிங்கள மிருகங்களைப் போல் இல்லாமல், அவர்கள் மனிதர்களாக இருந்தார்கள் என்பதாலா? இப்போது சொல்லுங்கள் முரளி........ மிருகங்களுக்காகத்தான் பேசுவீர்கள்..... மனிதர்களுக்காகப் பேசவே மாட்டீர்களா?
நடந்தது போர்தான் என்றால், மனித உரிமை மீறல்கள் இருதரப்பிலுமே நடந்தது என்றால், ஒரு தரப்பான சிங்களத் தரப்பு மீதான புகார்களுக்கு மட்டும் ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருப்பது ஏன் - என்று எப்போதாவது யோசித்துப் பார்த்தீர்களா முரளி? இதையெல்லாம் யோசிக்காமல், '20, 30 தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என்று அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்வதால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடுமா' என்று ஆணவமாகப் பேசலாமா?
'கடந்த காலத்தைப் பற்றி எதற்காகப் பேசவேண்டும், எதிர்காலத்தைப் பற்றிப் பேசுவோம்' என்று போதிக்கிறீர்கள் முரளி. வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை பங்கர்களைத் தேடித் தேடிப் பதுங்கியிருந்தீர்களென்றால் இப்படியொரு உபதேசத்தை உங்களால் உதிர்த்திருக்க முடியுமா?
எங்கள் உறவுகள் மீது உங்கள் சிநேகிதர்கள் விமானங்களிலிருந்து மாறி மாறி குண்டு வீசிக் கொண்டிருந்த போது, உலகின் ஏதோவொரு மைதானத்தில் பந்து வீசிக் கொண்டிருந்தீர்கள் முரளி! அப்போது நீங்கள் வாய் திறக்காததை நாங்கள் யாராவது கண்டித்தோமா? அப்போது பேசாத உங்களுக்கு இப்போது ஏன் வாய்கிழிகிறது என்பது தான் எங்கள் கேள்வி.
தன் இனத்துக்கு எதிரான அநீதிகளைத் தட்டிக்கேட்கக் கூட அஞ்சிநடுங்கும் பிரபலங்கள் எல்லா இனங்களிலும் இருப்பார்கள் முரளி! அதே போன்று, தன் இனம் இழைக்கிற அநீதியைத் தட்டிக் கேட்கத் தயங்காதவர்களும் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். அஞ்சி அஞ்சிச் சாகிறவர்களுக்கு நீங்கள் அடையாளம் என்றால், சாவுக்கும் அஞ்சாமல் நேர்படப் பேசியவர்களின் அடையாளமாக இருந்தவன் - லசந்த விக்கிரமதுங்க. 'தன்னுடைய சொந்த மக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு என்னுடைய இலங்கை' என்று மனம் திறந்து பேசினான் அவன்.
கொல்லப்பட்ட மக்களுக்காக அவர்கள் கொல்லப்பட்ட நேரத்திலேயே நீதி கேட்டவன் லசந்த. கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கூட கேட்கக்கூடாது என்பவர் நீங்கள். உங்கள் இருவரில் யார் தமிழர், யார் சிங்களர் என்பது ஒரு புறம் இருக்கட்டும் முரளி. உங்கள் இருவரில் யார் மனிதர்...... அதைச் சொல்லுங்கள் முதலில்!
'தமிழினத்துக்குச் செய்கிற துரோகத்துக்காக' - என்று சொல்லி உங்களைப் புண்படுத்த மனம்வரவில்லை முரளி. 'சிங்கள சிநேகிதர்கள் மீதான உங்களது விசுவாசத்துக்காக' லங்கா ரத்னா பட்டமே கூட உங்களுக்குக் கொடுக்கப்படலாம் என்பது நண்பர்களின் யூகம். அந்த யூகத்தை என்னால் மறுக்க முடியவில்லை. (நீங்கள் சொன்ன மாதிரி நான் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன் முரளி.)
அதே சமயம், எங்கள் இனம் அழிக்கப்படுவதை எதிர்த்த லசந்தவுக்கு உங்கள் அலரி மாளிகை சிநேகிதர்கள் 'அமரர்' பட்டம் வழங்கிய கடந்த காலத்தையும் என்னால் மறக்க முடியவில்லை முரளி. (அலரி மாளிகைக்கு உங்களைப் போலவே சிநேகிதராக இருந்தவர் லசந்த. அதனால் சொல்கிறேன் முரளி.... எச்சரிக்கையாய் இருங்கள். மார்ச் மாத ஜெனிவா நெருக்கடியிலிருந்து தப்பிக்க 'பயங்கரவாதம்' - என்கிற கேடயம் மீண்டும் தேவைப்படலாம் உங்கள் சிநேகிதர்களுக்கு! அதற்கான பலிகடாவாக நம்மில் எவரும் மாறிவிடக் கூடாது.)
2009 ஜனவரியில் கொழும்பு வீதியில் கோதபாயவின் கூலிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட லசந்தவின் இறுதிச் சடங்கில் துணிவுடன் கலந்துகொண்ட மனோ கணேசனை நீங்கள் அறிவீர்கள் தானே முரளி! தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த லசந்தவின் இறுதிச் சடங்கில் உயிர் அபாயத்தையும் மீறி மனோ கலந்துகொண்டது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டீர்களென்றால், பிழைத்திருத்தல் பொருட்டு மனசாட்சிக்குச் செய்கிற துரோகம் எவ்வளவு கேவலம் என்பதை உணர்வீர்கள். நக்கிப் பிழைக்கிற நாயும், கொத்திப் பிழைக்கிற காக்கையும், எத்திப் பிழைக்கிற மனிதனைக் காட்டிலும் மோசமானவையா முரளி?

Muraliyin Vaayil Maginthavin AAn Kuri