Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் சார்பில் நிறுத்தப் பட்ட குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி தேர்தலில் வெற்றி அடைந்து இந்தியாவின் 13 வது குடியரசு தலைவராக தெரிவாகியுள்ளார். அவர் 5.18 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து நின்ற பாஜக ஆதரவு வேட்பாளர் சங்மா 2.2 லட்சம் வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்க, கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்கு தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஏ.கே அந்தோணி, ப. சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானவுடன்,காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரணாப் முகர்ஜி இல்லத்தில் சென்று வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பிறந்த பிரணாப் முகர்ஜி, குமாஸ்தாவாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் வழக்கறிஞராக பணியாற்றி, 1960 இல் காங்கிரசில் இணைந்து பணியாற்றியவர். காங்கிரசில் இந்திரா காந்தியிலிருந்து ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என்று அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்து உயர்ந்தவர் என அவரது 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை கூறுகிறது. வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜி எதிர்வரும் புதன் கிழமை 25ம் திகதி 11 மணியளவில்நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்க உள்ளதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக நாளை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பிரிவு உபசார விழா நடக்க இருக்கிறது. இந்த பிரிவு உபசாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மீரா குமார், அமீத் அன்சாரி மற்றும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தெரிவானார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com