தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவு தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க -வை கட்டிக் காத்து ஐந்து முறை ஆட்சியில் அமர்த்திய பெருமைக்குரிய பெண்ணாகத் திகழ்ந்து புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தவர்.
காவிரி , முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் உயிர் நாடியான சிக்கல்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்த பெருமை அவருக்கு உண்டு.
ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை அவரையேச் சாரும்.
எழுவர் விடுதலைக்கான அவருடைய முயற்சிகள் வெற்றி பெறும் முன் அவர் மறைந்தது வருந்தத்தக்க ஒன்றாகும்.
வரலாற்றில் துணிவு படைத்த பெண்மணியாக அவர் நினைவு கூரப்படுவார்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்

0 Responses to தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு பழ.நெடுமாறன் இரங்கல்!