Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷூக்கு தொலைபேசி மூலம் இனந்தெரியாத நபர்களினால் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு  தெரிவித்தே வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் கொலை அச்சுறுத்தல் விஜயலட்சுமி ரமேஷூக்கு விடுக்கப்பட்டுள்ளது. கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

 இதனிடையே, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையே, மாகாணத்தில் ஆட்சியமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமோ எந்தவித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமலேயே வடக்கு மாகாண ஆளுநரினால், வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

0 Responses to வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்: ஜீ.ஏ.சந்திரசிறி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com