2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக யோகா குரு பாபா ராம் தேவ் அறிவித்துள்ளார்.
அதோடு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனது முழுமையான ஆதரவு இருக்கும் எனவும் அவர் பிரதமர் ஆவதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் .
மேலும் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் தேர்தல் தொகுதிகளான அமெதி மற்றும் ராபெரெலியில் தான் தீவிர எதிர்ப்பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மோடி மீது மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் போதும் தனது ஆதரவு மோடிக்கு மாத்திரமே. பாஜகவுக்கு கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் மருகமன் ரொபேர்ட் வதேரா, பல மில்லியன் ரூபாய்க்கு ஹரியானாவில் நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், காங்கிரஸ் 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்து வெளியேறிய் பின்னர் அவர் நிச்சயம் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் செல்வார் எனவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தான் ஒரு கட்சியிலும் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளவோ, போட்டியிடவோ போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to சோனியா, ராகுலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வேன் : சபதம் எடுக்கும் ராம்தேவ்