Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பினில் ஆளுநர் சந்திரசிறி முன்னிலையினில் சுகாதார அமைச்சு அதிகாரிகளிடையே வீடியோ கான்பரஸிங் முறைமையினில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியினில் முடிவடைந்துள்ளது. ஒரு பகுதியினருக்கு மட்டும் நிரந்தர நியமனம் தரப்படுமெனவும் ஏனையோர் தொண்டர்களாக பணியாற்றவும் கோரப்பட்டதை போராட்டகாரர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.அதிலும் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டவர்களில் சிலர் தவிர ஏனையோரை தாம் அறிந்திருக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.அதையடுத்து பணிப்புறக்கணிப்பு  எட்டாவது நாளாக  இன்றும் தொடர்கிறது.

வைத்தியசாலையில் பணியாற்றும் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி இன்று தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று கொழும்பிலிருந்து சுகாதார குழுவொன்று வருகை தர இருந்தது. தொண்டர்களும் தமது பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கப்போகிறது என ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால் பல மணிநேரத்தின் பின்னரே அவர்கள் வருகை தர மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.அதையடுத்து அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை நலன்புரிச்சங்கப்பிரதிநிதிகள் சகிதம் போராட்டகாரர்கள் ஆளுநரது அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பே வைக்கப்பட்டனர்.எனினும் அப்பேச்சே தோல்வியினில் முறிவடைந்துள்ளதுடன் போராட்டகாரர்களையும் பிளவு படுத்தியுள்ளது.

இதனிடையே தொண்டர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மருத்துவ பரிசோதனையொன்றிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தார். தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பை இரு தடவைகள் கடந்து சென்றிருந்த போதும் அதை வெறும் வேடிக்கை பார்த்தவாறே சென்றிருந்தார். எனினும் போராட்டத்தின் எட்டாவது நாளான இன்று வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

0 Responses to பேச்சுக்கள் தோல்வியில்! தொடர்கின்றது தொண்டர்களது போராட்டம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com