ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன் போது இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டிருந்த போதும், உறுதியா தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் கூட்டமைப்பு இன்னும் கலந்துரையாட வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கின்றமையை, ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்று முடிவெடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக் குழு ஒருபோதும் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை தராது.
எனவே இந்த விடயத்தில்; இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மீள சிந்திக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக் கொள்வது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை – பினர் சுரேஷ் பிரேமசந்திரன்