உலக தமிழர்கள் அனைவர்களுக்கும் எமது நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
எங்கள் மதிப்பிற்குரிய உலகத் தமிழர் சமூகத்திற்கு!
இன்று நத்தார் திருநாள், இயேசு பிறந்த நாள் .உலகெங்குமுள்ள அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானதும் சிறப்பு வாய்ததுமான பண்டிகையாக கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது.மனிதர்களை ரட்சிப்பதற்காக தேவமைந்தன் மானிட வடிவில் தொழுவத்தில் தோன்றிய நாள் . இந்த நாளை உலக மக்கள் இன்றைய தினம் கொண்டாடுகிறார்கள்.
இத் திருநாளை இன்று இங்கு நாம் எல்லோரும் கொண்டாடிகொண்டிருக்கும் போது எமது சொந்த தாய் மண்ணில் தமிழருக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு, இன அழிப்பு சிங்கள அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் எமது சொந்தங்கள் பசி பட்டினி வறுமை என்ற நிலைக்கு தள்ளப்படுவது மட்டுமில்லாமல் அவர்கள் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் ஒதுங்க கூட இடமில்லாமல் மிக மோசமான நிலையில் தவிக்கின்றனர் .
விடுதலைக்காகவும் எங்கள் மக்களுக்கான நீதிக்காகவும் அமைதிக்காகவும்; தமது விலைமதிக்க முடியாத உயிர்களைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மாவீரர்களை நினைத்து எமது ஒற்றுமையின் வலிமையை காட்டி நாம் ஒன்றிணைந்து அவர்களின் வழிகாட்டலில் எமது மக்களுக்கான நீதியும் , அந்த மக்களின் அரசியல் அபிலாசைகளும் ,விடிவும் கிடைக்கும் வரை சர்வதேச அரங்கில் எமது நீதி கோரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.
இத் திருநாளில் அள்ளல் படும் எம்மக்களுக்கு துணையாக இருப்போம் என்ற உறுதியுடன் வரும் புத்தாண்டை தமிழருக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டாக மாற்றுவோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.
உலக தமிழர்கள் அனைவர்களுக்கும் எமது நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

0 Responses to உலக தமிழர்கள் அனைவர்களுக்கும் எமது நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் - யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை