காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று திமுக தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருணாநிதி கொடுத்துள்ள நேர்காணலில் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் தனது மாநிலத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர், அதனால் அவரை மீண்டும் மீண்டும் மக்கள் தெரிவு செய்துள்ளனர் என்று புகழாரம் சூட்டி பேசி இருப்பது போல தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள உள்ளார் என்று யூகங்கள் பரவிவந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, மோடியை நான் புகழ்ந்து பேசவில்லை என்றும், அந்த பத்திரிகை திரித்து எழுதிவிட்டது என்றும் பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கருணாநிதி, காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகள் திமுகவுக்கு முரணானது என்றும், எனவே, காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது பொதுக்குழுவில் எடுக்கப் பட்ட முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to பாஜகவுடன் கூட்டணியா? : ஊடகங்கள் திரித்துப் பேசுகின்றன என்கிறார் கருணாநிதி