Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

என் மீதான பாலியல் புகார் என்பது அப்பட்டமான பொய் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலி கூறியுள்ளார்.

பயிற்சிக்கு வந்த பெண் வழக்கறிஞரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த கங்குலி மீது, பாதிக்கப் பட்ட பெண் வழக்கறிஞரே காலம் கடந்த நிலையிலும் புகார் அளித்து இருந்தார்.

இந்த புகார் உண்மையா என்று விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டார். புகாரை விசாரித்த அந்த குழு, புகாரில் உண்மை இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

இந்நிலையில் கங்குலி நீதிபதியாக இல்லாத பட்சத்தில் இனி உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் புகார் குறித்து கங்குலியிடம் விசாரிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் கேள்வி வைத்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, கங்குலியை விசாரிக்க உத்தரவிடலாம் என்றும்  கூறியுள்ளது. இதை அடுத்து மத்திய சட்ட அமைச்சகம் கங்குலி மீதான விசாரணையத் துவக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் என் மீதான பாலியல் புகார் என்பது அப்பட்டமான பொய் என்றும், ஊடகங்கள் இதை பெரிது படுத்தி விட்டன என்றும் புகாருக்கு ஆளாகியுள்ள முன்னாள் நீதிபதி கங்குலி கூறியுள்ளார்.

0 Responses to என் மீதான பாலியல் புகார் அப்பட்டமான பொய்!:கங்குலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com