Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையை நடத்தி; குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை கையாளும் தூதுவரும், நீதிபதியுமான ஸ்டீபன் ஜே ரெப்பின் இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

 இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகளிடம் ஸ்டீபன் ஜே ரெப், விபரங்களைக் கேட்டறிந்தார். அத்தோடு, மோதல்களின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகிய விடயங்கள் பற்றியும் மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார் என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்குமான சுபீட்சம் மற்றும்  சமாதானத்தை மேம்படுத்துவதற்காக  இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்பு கெண்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வருவதும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சியின் கொள்கைகளை  மதித்து ஒன்றிணைந்த நாடாக முன்னோக்கிச் செல்வதும் மிகவும் முக்கியமானதாகும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டீபன் ஜே ரெப்பின் இலங்கை விஜயம் கடந்த 06ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் இடம்பெற்றது. அவர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

0 Responses to மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com