Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம், கனேடிய பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர்.

அவ்வாறான நிலையிலும், ஜனாதிபதி எதற்கும் அஞ்சாமல் தீர்மானம் எடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அன்று ஜனாதிபதி தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து தளர்ந்திருப்பாரானால் அமெரிக்கர்கள் பிரபாகரனை மீட்டுக்கொண்டு சென்றிருப்பர்.  இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரகசியத் தகவலை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், அமைச்சருமான டியூ குணசேகர வெளிப்படுத்தியுள்ளார்.

காலியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு,

எமக்குச் சர்வதேச ரீதியில் சவால்கள் இருக்கின்றன. 2009ஆம் ஆண்டு மே மாத இறுதி வாரம் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 19ம் திகதி அனைவரும் வெளியில் கொண்டுவரப்பட்டனர்.

இதன்போது நான் அறிந்த சில விடயங்களைக் கூறவேண்டும். ஏனெனில் அந்தச் சந்தர்ப்பங்களில் இவற்றைக் கூறவில்லை. தற்போது அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூறவேண்டும். வரலாற்றில் இவை அறிக்கைப்படுத்தப்படவேண்டும்.

அப்போது இருந்த நிலைமை என்ன? அந்த இறுதி 5 தினங்களில் என்ன நடந்து என்று எனக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, எமது ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தார். இல்லையேல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவோம் எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் போரை நிறுத்துமாறு தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கூறினார். கனேடியப் பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோரும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு கூறினர்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது. மே 13ம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அமைச்சரவை கூடிப் பேச்சு நடத்தியது. அன்று காலை ஜனாதிபதி ஜோர்தான் நாட்டுக்குச் சென்றிருந்தார். நான் வரும்வரை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் இதைத் தொடருங்கள். எவருக்கும் அடிபணிய இடமளிக்க வேண்டாம் என்று கூறினார்.

இதுதான் எமது நாட்டின் தீர்மானம் மிக்க தருணம். அந்தச் சமயத்தில் ஜனாதிபதி உறுதியாகத் தீர்மானம் எடுத்தார் என நான் நினைக்கிறேன். அன்று ஜனாதிபதி தமது உறுதியிலிருந்து தளர்ந்திருந்தால், அமெரிக்கர்கள் வந்து பிரபாகரனை மீட்க்கொண்டு சென்றிருப்பர். அவ்வாறானநிலை ஏற்பட இடமளிக்கப்படவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அன்று போரை முடிவுக்குக் கொண்டு வந்ததே இன்று சர்வதேச நாடுகள் எம்மை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பிரதான காரணமாக உள்ளது. அதைவிடுத்து, தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். எனக்கு ஞாபகம் இருக்கிறது.

மே 13ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமைச்சரவை கூடிப் பேச்சு நடத்தியது. இதுதான் எமது நாட்டின் தீர்மானம் மிக்க தருணம். அந்தச் சமயத்தில் ஜனாதிபதி உறுதியாகத் தீர்மானம் எடுத்தார் என நான் நினைக்கிறேன்.

0 Responses to ஒபாமாவுக்குக் கூட அஞ்சாதவர் மஹிந்த! மார்தட்டுகின்றார் அமைச்சர் டியூ குணசேகர!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com