Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் 67,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இருப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண காணிப் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவைத் தலைவர், “2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்று வரை முப்படைகளாலும் வடக்கு மாகாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.இதனால், பலர் காணிகள் இல்லாமல் இருக்கின்றனர். அத்துடன், காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு காணிகள் இல்லை. அவை இராணுவத்தின் வசமிருக்கின்றது.

காணியின் உரிமை அந்தந்த மாகாணங்களிற்கு உண்டு. ஆகவே அந்தந்த மாகாணங்களிற்கு காணி உரிமைகள் வழங்கப்படுவதன் ஊடாக காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் அரச மற்றும் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள முப்படைகளும் இந்த வருட இறுதிக்குள் வடக்கிலிருந்து வெளியேறவேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 Responses to 67,000 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; வெளியேறக்கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com