இலங்கை - தமிழக மீனவர் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை திகதி தள்ளிப் போவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப் படுவதை தவிர்க்கவும், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்து உள்ளன.
இந்நிலையில் இந்த பேச்சுவர்த்தை வருகிற 20 ம் திகதி சென்னையில் நடக்கும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், தமிழக மீனவர்கள் இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டதோடு சரி, முறையான அறிவிப்பை மீனவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கவலையில் இருந்தனர்.
இவ்வேளையில் இலங்கை அரசு இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை மீனவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கோரிக்கை வைத்த நிலையில், இந்த பேச்சுவார்த்தையை வருகிற 27ம் திகதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக இன்றைய தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Responses to இலங்கை - தமிழக மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது?