Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல் காலங்களில் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோரைப் பராமரிக்கும் சுகாதார நிலையமொன்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தன்னுடையெ பொறுப்பின் கீழ் வவுனியாவின் பம்மைமடுவில் ஸ்தபித்துள்ளது. இந்தப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்துள்ளார்.

 இலங்கையின் மோதல்களில் சிக்கி குறிப்பிட்டளவானவர்கள் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக, இறுதிமோதல்களின் போது பலரும் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலிகளில் பயணிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

 இந்தவிடயங்களைக் கருத்தில் கொண்டே முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரை பராமரித்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை தொடர்ச்சியாக வழங்கும் நோக்கிலேயே குறித்த பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 இதனிடையே, இத்தகைய பராமரிப்பு நிலையங்களை தேவைக்கேற்றவாறு வேறு மாவட்டங்களிலும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், விரைவில் அதற்கான நிதியமொன்று ஆரம்பிக்கப்படும் என்றும் பராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

0 Responses to வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com