Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமது டுவிட்டர் தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தையும், கருத்தையும் மாற்றப் போவதில்லை என்று, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவில் இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகனை தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக கருத்திட்டு, அது சம்ந்தமான புகைப்படம் ஒன்றையும் அமெரிக்க தூதரகம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்திருந்துடன், அதற்கான விளக்கத்தையும் கோரவிருப்பதாக தெரிவித்திருந்தது.

எனினும் தமது கருத்தையோ, புகைப்படத்தையோ மாற்றப் போவதில்லை என்று, அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to டுவிட்டர் தளத்தில் தரவேற்றம் செய்த படத்தை மாற்றமாட்டோம் - அமெரிக்கத் தூதரகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com