பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலண்ட்டுக்கும் நடிகை ஒருவருக்கும் இடையில் தொடர்பிருப்பதாக பிரபல சஞ்சிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமது பிரைவசி விடயங்களில் தலையிடும் செயல் இதுவென ஹாலண்ட் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் இக்குற்றச்சாட்டை மறுக்கவில்லை. இதனால் இவ்விடயம் மேலும் சூடு பிடித்துள்ளது. 41 வயதான ஜூலி காயத் என்பவர் பிரபல தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகையாவார். 50க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும், ஹாலண்டுக்கும் இடையில் இரகசிய தொடர்பு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் தகவல் கசிந்து வந்தது. கடந்த வருடம் மார்ச் மாதம், குறித்த நடிகை இவ்வாறு தகவல் பரப்பும் வலைத்தளங்கள் மீது புகார் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பது போன்று தனக்கும் அந்தரங்க விடயங்கள் இருக்கிறது. தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப் போவதாக ஹாலண்ட் அறிவித்துள்ளார்.
ஆனால் தன் மிதான குற்றச்சாட்டை அவர் மறுக்கவில்லை என பிபிசி தெரிவிக்கிறது. குளோசர் எனும் சஞ்சிகை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது இறுதி அச்சுப் பதிப்பில், ஹாலண்டும், குறித்த நடிகையும் தனியாக ஒருபிளாட்டில் ஓரிரவு தங்கியிருந்ததாக தகவல் வெளியிட்டிருந்ததுடன் அதற்கு ஆதாரமாக குறித்த அறைக்கு இருவரும் தனித்தனியாக வந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. ஹாலண்ட் ஹெல்மெட் அணிந்த வாறு, மோட்டர் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் ஜூலி காயத் வந்துள்ளார்.
பின்னர் அதிபரின் பாதுகாவலர்கள் மறுநாள் காலை குறித்த அறைக்கு காலை உணவு கொண்டுவந்து கொடுத்த ஆதார புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸுவாஸ் ஹாலண்டும், ஊடகவியலாளர் வலெரி ட்ரியெர்வெயிலருடன் தற்சமயம் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சோசலிஸ்ட் கட்சி அரசியல்வாதியான செகொலென் ரோயல் என்பவரை ஹாலண்ட் முன்னர் விவாகரத்து செய்திருந்தார். அவர்கள் இருவருக்கும் நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நடிகையுடன் இரகசியத் தொடர்பு? : 'பிரைவசி' என்கிறார் பிரான்ஸ் அதிபர்