Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசேட புலனாய்வு பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் புலனாய்வாளர்களாக அரசுக்கு சார்பான ஊடகவியலாளர் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கையாள அமைப்பொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்;கனவே பல்வேறு மேற்படிப்புகளுக்காகச் சென்றுள்ளதாக கூறி புலனாய்வாளர்களை ஊடகவியலாளர்கள் போர்வையினில் நடமாட கோத்தா வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அங்கிருந்து அரசாங்கத்திற்குத் தேவையான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் இந்த ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதுடன், எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் திட்டங்கள், அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் அதற்கு யார் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களை தினமும் தேடி வருகின்றனர். மேற்படி ஊடகவியலாளர்கள் திரட்டும் புலனாய்வு தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வு பிரிவான டி.ஓ.சி என்ற விசேட பிரிவுக்கு வழங்கப்படும்.

இந்த புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் ஹெந்தா வித்தாரண நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இதனிடையே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு விவகாரங்களை கையாள கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியின் குகநாதன் மற்றும் அதன் பிரதம செய்தி ஆசிரியர் ஜெயச்சந்திரன் ஆகிய இருவர் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அவ்வகையில் ஊடகவியலாளர்களிற்கு மதுபானம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய விடுதியொன்றை திறக்க கோத்தபாய நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக இதனை தானே திறந்து வைக்க கோத்தா விரும்பியதாகவும் இறுதியில் சர்ச்சைகளினில் சிக்காத இலங்கை அமைச்சரான டியூகுனசேகராவைக் கொண்டு நாளை அதனை யாழினில் திறக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

0 Responses to கோத்தாவின் ஏற்பாட்டில் யாழில் மதுபானச்சாலை! ஊடகவியலாளர்களைக் கவிழ்க்க ஏற்பாடாம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com