சிவாஜிலிங்கம் வருகை தரக்கூடாதென படை அதிகாரிகள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்திய சம்பவமொன்று வல்வெட்டித்துறையில் நடந்துள்ளது.
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தைப்பொங்கல் விளையாட்டு நிகழ்வொன்றில் கட்டாயத்தின் பேரினில் இராணுவத்தினர் அதீதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். அதேவேளையில், அந்நிகழ்வில் விருந்தினராக சிவாஜிலிங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்.
இதனை அறிந்து கொண்ட இராணுவ அதிகாரிகள் இந்நிகழ்விற்குச் சிவாஜிலிங்கம் வரக்கூடாது என்றும் அவர் உரையாற்றக் கூடாதென்றும் கூறி நிகழ்வைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த வாரம் மற்றொரு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடைய இடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டால் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என பொலிஸ் மற்றும் படையினர் தெரிவித்ததுடன், நிகழ்வையும் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடமாகாண சபை உறுப்பினர்களை அழைக்க தடை!!படையினர் விதித்தனராம்!!