இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியதை முன்னிட்டு, இந்திய சிறைகளில் இருந்த பாகிஸ்தான் மீனவர்கள் 88 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலையாக உள்ளனர்.
ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக அனுஷ்டித்து, 5 முறை தொழுது நோன்பு இருப்பது வழக்கம். இன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பைத் தொடங்கி உள்ளனர். இஸ்லாம் புனித நோன்பை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமருடன் தொலைப்பேசியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பேசிய நரேந்திர மோடி, இந்திய சிறைகளில் இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களை விடுவிப்பதாக அறிவித்திருந்தார்.
அதன் படி, இன்று இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிய வருகிறது. இதற்கிடையில் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியது: கைதிகள் விடுதலை