Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்படாமை தொடர்பில், இலங்கை வந்துள்ள சர்வதேச யுத்தக் குற்ற சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சட்டத்தரணி ஸ்டீவன் ஜே ரெப் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகள் அடங்கிய அரசாங்க இணைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் குறித்த பரிந்துரைகளை அமுல் படுத்துவதற்கான கால திட்டமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதனை சில அரசாங்க அதிகாரிகள் அவரிடம் காண்பித்துள்ளனர்.

இதன் போது இணைத்தயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இந்த பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லையே என்று அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதன் ஊடகா இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை அமுலாக்கும் திட்டங்களை மாத்திரம் காண்பிக்காமல், அமுலாக்கப்பட்டுள்ள விடயங்களை வெளிப்படுத்துமாறு அவர் கோரிய போதும், அதற்கு எந்த அதிகாரிகளும் பதில் வழங்கவில்லை.

0 Responses to பரிந்துரைகள் அமுலாக்கப்படாமை தொடர்பில் ஸ்டீவன் ஜே ரெப் அதிர்ச்சி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com