Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது 11.02.2014 இன்று 13 ம்  நாளாக லக்ஸம்பர்க் நாட்டை சென்றடைய 10 முஆ தூரத்தை கொண்டுள்ளது.

காலநிலை சீராக இல்லாத போதிலும் நடைப்பயண வீரர்கள் மிக வீரத்துடன் ஐநா நோக்கி செல்கின்றனர் . இன்றைய நாளில் நடைப்பயண வீரர்களின் பராமரிப்பு வாகனம் பளுதடைந்த நிலையில் மிக கடினமான நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டனர்.

எத்தடை வரினும் தாயக விடுதலையை தமது மூச்சாக கொண்டுள்ள நடைப்பயண வீரர்கள் தமது தேசத்தின் விடியலுக்காய் தொடர்ந்து விரைந்து செல்கின்றனர்.

0 Responses to 13வது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com