Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 21.02.2014 இன்று 24வது நாளாக 21கேயெம் தூரத்தை கடந்து Sarrebourg  நகரத்தை வந்தடைந்தது.

இன்று மனிதநேய பணியாளர்கள் ஓர் நகரபிதாவுனுடைய உதயவியாளருடனான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்கள். பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள்  நடைப்பயணத்தை பற்றி தொடர்ச்சியாக  பிரசுரிக்கின்றது.

இன்று மழையாகவும் கடும் காற்றாகவும் சீரற்ற காலநிலையாக இருப்பதால் நடைப்பயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப்பணியாளர்கள் பல்வேறு வேதனைகளையும் துயரங்களையும் சுமந்து உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி நடைபயணத்தை தொடர்கின்றனர

தமிழின  அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் எதிர்வரும் 24.02.2014 திங்கள் அன்று நோர்வே நாட்டினுடைய பாராளுமன்ற முன்றலில் தமிழ் வண்டி பரப்புரை ஊர்தி பயணம் ஆரம்பமாகி பல நாடுகளை ஊடறுத்து 10.03.2013 அன்று ஐ.நா.வினுடைய மனிதவுரிமை மன்றத்தை சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தற்கதாகும்.

0 Responses to அடிமை நிலை தகர்க்க 24வது நாளாக ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com