இலங்கையின் 66 வது சுதந்திர தினம் தெற்கில் சிங்கள மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வட- கிழக்கெங்குங்கும் கறுப்புக்கொடி பீதியில் இலங்கை இராணுவம் அலைந்து திரிகின்றது.கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் படையினரது வீதி ரோந்துகள் கடந்த ஒரு சில நாட்களாக அதிகரித்துள்ளது. முக்கிய சந்திகள் மற்றும் அரச அலுவலகங்களென படையினர் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே யாழ். பல்கலைக்கழக சுற்றாடலில் பெருமளவு இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை இரவு குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக பரமேஸ்வரா சந்தி முதல் கலட்டி சந்தி ஈறாக படையினர் இரவிரவாக நடமாடித்திரிவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நாள் சிங்களவர்களால் சுதந்தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஏதாவது கறுப்பு கொடிக்களை ஏற்றவுள்ளனராவா என பல்கலைக்கழக மாணவர்களிடம் படைப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. வடமாகாணசபை நாளை ஏதாவது நிகழ்வுகளை முன்னெடுக்கின்றதாவெனவும் ஒட்டுபார்க்கப்படுகின்றது.
வட-கிழக்கினில் நாளை சிங்கக்கொடிகள் ஏற்றப்பட்டு அப்பகுதிகளை அலங்கரிக்கவும் படைத்தரப்பினால் பணிக்கப்பட்டுள்ளது.
0 Responses to இலங்கையின் 66 வது சுதந்திரம்! தமிழர் தாயகத்தினில் கறுப்பு கொடிப் பீதியில் படைத்தரப்பு!!