உலகம் பரந்து வாழும் தமிழீழ மக்களாகிய நாம், இனியும் சிங்கள இனத்திடம் அன்பையும் சமாதானத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும். ஆண்டாண்டு காலமாக, தமிழீழ மக்களின் குருதியிலேயே , தனது சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு நிறமூட்டி வருகிறது சிறிலங்கா அரசு. இன்னமும் தமிழர்களை அழிப்பதையே குறியாகக்கொண்ட சிறிலங்கா அரசிடம் சமாதானம் என்பதனை எதிர்பார்ப்பதற்கு மாறாக, உலக அரசுகளிடம் எமது ஒன்றுபட்ட எழுச்சியை நிரூபித்து , தமிழீழம் நோக்கியதான இலட்சிய உறுதி கொண்ட செயற்பாடுகளில் எம்மை உந்திச் செயற்படச்செய்வதே எமக்கான விடிவைத் தேடித் தரும். என சிங்களத்தின சுதந்திரதின விழா குறித்து ஜேர்மன் தமிழர் இளையேரர் அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
அன்பான தமிழீழ உறவுகளே,
நீண்ட காலமாக சுதந்திரத்திற்காகப் போராடி வரும் எமது தமிழினமானது, இருப்பிடம் தொலைத்து, அமைதியின்றி , உறவுகளைப் பிரிந்து வாழுகின்ற மிகக்கொடுமையான சூழ்நிலையில், சிறிலங்கா அடக்குமுறை அரசானது தனது சுதந்திர தினக்கொண்டாட்டங்களுக்கான முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது. தமிழ் மக்களின் நீண்ட காலத் தேவைகளும், அவர்களது வேண்டுகோள்களும் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் சிறுபான்மை இனம் அல்லது இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற அடைமொழியோடு நிர்க்கதியாக வாழ்ந்துவருகிறார்கள். ஈழத் தமிழ் மக்களின் பூர்வீக வாழிடங்களிலும், அவர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்த நிலங்களிலும் சிறிலங்காப் பேரினவாத அரசின் அடக்குமுறை இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழீழ மக்களின் அடிப்படைத் தேவைகள் முற்றுமுழுதாக மறுக்கப்பட்டு , அவர்களது பாரம்பரிய தொழில்களைக் கூடச் செய்யவிடாது, அடிமைகளாக அவர்களை நடாத்தி வரும் சிறீலங்கா அரசாங்கம் ; சமவேளையில் இலங்கையின் ஏனைய இனத்தவருக்காக மட்டும் நடாத்தி வரும் ஒரு கேளிக்கைத் திருவிழாவாகவே , சுதந்திரதினக் கொண்டாட்டங்களை உலகத் தமிழ் மக்கள் நோக்குகிறார்கள் .
முன்னாள் தமிழ்த் தலைவர்கள் அறவழியில் போராடி , அது பலனில்லாமல் போகவே , தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலைமையில் மாபெரும் போராட்டம் வெடித்தது. அவர் பின்னே நின்ற ஆயிரமாயிரம் போராளிகளோடு , தமிழர்களது போராட்டம் இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. தமிழர்களுக்குத் தமிழீழம் கிடைக்குமாக இருந்தால், அது சர்வதேசத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்ற சிறீலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பிய உலகம், மிகவும் கொடூர முறையில் தமிழ்மக்கள் மீது போரினை ஏவி, ஏராளமானோரைக் கொன்றுகுவித்தது. இன்றும் கூட, தமிழீழ மண்ணில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல்கள் என்பன சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. இவ்வாறான , கட்டுப்படுத்த முடியாத குற்றச் செயல்களின் அரசாங்கமாகவே சிறிலங்கா அரசாங்கம் அமைந்திருக்கிறது.
உலகம் பரந்து வாழும் தமிழீழ மக்களாகிய நாம், இனியும் சிங்கள இனத்திடம் அன்பையும் சமாதானத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும். ஆண்டாண்டு காலமாக, தமிழீழ மக்களின் குருதியிலேயே , தனது சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு நிறமூட்டி வருகிறது சிறிலங்கா அரசு. இன்னமும் தமிழர்களை அழிப்பதையே குறியாகக்கொண்ட சிறிலங்கா அரசிடம் சமாதானம் என்பதனை எதிர்பார்ப்பதற்கு மாறாக, உலக அரசுகளிடம் எமது ஒன்றுபட்ட எழுச்சியை நிரூபித்து , தமிழீழம் நோக்கியதான இலட்சிய உறுதி கொண்ட செயற்பாடுகளில் எம்மை உந்திச் செயற்படச்செய்வதே எமக்கான விடிவைத் தேடித் தரும்.
தமிழரின் தாகம் தமழீழத் தாயகம்
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி.
0 Responses to சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் 66வது சுதந்திரதினம்!! யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு