தமிழ் தேசிய கூட்டமைப்பை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர தாம் தயார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கூட்டமைப்புக்கு அரசியல் தீர்வில் விருப்பம் இல்லை என்று அரசாங்கம் தென்னிலங்கையில் பிரசாரம் செய்து வருகிறது. இது சரியான நிலைப்பாடு இல்லை.
இதற்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளின் போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் ஆவணங்களை அரசாங்கம் அடுத்த பேச்சுவார்த்தைகளில் முன்வைக்க வேண்டும்.
அவ்வாறு முன்வைக்குமாக இருந்தால், தாமே தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கூட்டமைப்பை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர நான் தயார் – மனோகணேசன்