Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 24.02.2014 திங்கள் பிற்பகல் 15:00 மணிக்கு நோர்வேயிலிருந்து ஐ.நா நோக்கிய நீதிக்கான தமிழ்வான் பயணம் நோர்வே பாராளுமன்ற முன்றலில் இருந்து மிக எழுச்சியோடு புறப்பட இருக்கின்றது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக  தமிழ் மக்களை இன ஒழிப்பு செய்து இறுதியாக 2009 மிகப்பெரும் போரை உலக நாடுகளோடு இணைந்து நாடாத்தி எமது மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த கோரமுகத்தினை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த கோரியும் தொடர்ச்சியாக இனவாத பூதத்தால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது நிலத்தின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஒஸ்லோவை  மையப்படுத்தி மாபெரும் மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை நாடாத்தவேண்டிய அரசியல் தேவை உள்ளதால் ஜநாவின் 25வது கூட்ட தொடருக்கு முன்பாக இந்த போராட்டம் தமிழர் ஒருங்கிணைக்புக்குழுவாலும் மக்கள் அவையாலும் கூட்டாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தில் சமாதான தூதுவனாக வந்து ஈழத்தமிழ் இனத்துக்கு இரண்டகம் செய்த நோர்வே அரசு இனியாவது சிறீலங்காவின் கோரமுகத்தை கிழித்தெறிந்து தமிழ் இனத்தின் சனநாயக வழியிலான போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கவேண்டிய தேவையுள்ளது.

இந்தபோராட்டத்தின்போது பாராளுமன்றத்துக்குள் சந்திப்பை நடாத்துவதோடு இனஒழிப்புக்கான நீதியான சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தக்கோரிய தபால் அட்டை நோர்வே முழுவதும் விநியோகிக்கப்பட்டு ஜநாவுக்கு அனுப்கிவைக்கப்பட இருக்கின்றது.

அத்தோடு எமது மக்களின் உணர்வுகளை தாங்கிய நீதிக்கான தமிழ்வான் நோர்வே சுவீடன், டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இறுதியாக மார்ச் 10 ஜநாவை வந்தடையவுள்ளது.

ஆகவே அன்பான உறவுகளே அகவை பேதமின்றி அனைவரும் அணிதிரள்வோம் நாம் தமிழர் எமது தாயகம் தமிழீழம் என்ற தாகத்தோடு நோர்வே பாராளுமுன்றலில் நெஞ்சு நிமிர்த்தி நீதிகேட்போம்.

0 Responses to நோர்வேயிலிருந்து ஜநா நோக்கி நீதிக்கான தமிழ்வான் பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com