Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவிலிருந்து யாழ் திரும்பியிருந்த கனேடியப் பிரஜையான தமிழர் ஒருவரை சீலிடப்பட்ட நிலையில் சடலமாக பிரேத பெட்டியில் வைத்து  ஒப்படைத்த வைத்திய அதிகாரிகள் பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தியுமுள்ளனர். எனினும் இவருடைய மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படாதே சடலம் ஒப்படைக்கப்பட்டதாகப் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையைப் பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளங் காணப்படாத காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலைக்கு இவர் திரும்பியிருந்தார். இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த நபர் திருமணமாகி ஒரு வருட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கனேடிய பிரஜையான தமிழ் இளைஞர் மரணம்! இதுவரை நோய் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com