பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட்ட மூன்று தமிழர்களுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இது உலக தமிழர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் உருவாக்க இதன் உற்சாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக சேலத்தில் தந்தை பெரியார் சிலை அருகே திரண்ட திராவிடர் விடுதலை கழகம், ம.தி.மு.க, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி, மக்கள் விடுதலை உட்பட்ட பல்வேறு அமைப்பினர் சாலையில் பயனிப்போர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பட்டாசுகள் வெடித்தனர்.
'நல்ல ஒரு தீர்ப்பு வழங்கிய நீதிபதி அய்யாவுக்கு மனமார்ந்த நன்றிகள். வாதாடிய வழக்குரைஞர்கள், போராடிய தமிழ் நெஞ்சங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். இனி நம் மூன்று தமிழர்களை உடனடியாக தமிழக முதல்வர் விடுதலை செய்ய வேண்டும். அதுவே எங்கள் தற்போதைய கோரிக்கையும், முயற்சிகளும் ஆகும்" என்றனர் உணர்ச்சிவயப்பட்டு.
இளங்கோவன்.

0 Responses to மூன்று தமிழர் தூக்கு ரத்து! சேலத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)