இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பதவி நீக்கப்பட்டது சரியானது. அதில், எந்த சட்ட முரண்பாடுகளும் இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்தோடு, பாராளுமன்றத் தெரிவுக்குழு பிரதம நீதியரசரை விசாரித்தமை சட்டத்துக்கு முரணானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பையும் இரத்து செய்துள்ளது.
பாராளுமன்றத்துக்கு பணிப்புரைகளையோ, உத்தரவுகளையோ பிறப்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்டது சட்டத்துக்கு முரணானது என்று சர்வதேச அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்ற போதிலும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று அரசாங்க தரப்பு சட்டத்தரணி ராசிக் ஸரூக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் மற்றும் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்குப் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கப்பட்டிருந்தார்.

0 Responses to முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம் சரியானதே: உயர்நீதிமன்றம்