இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா எந்த விதமான பிரேரணையை முன்வைத்தாலும், இந்த முறை அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கே தங்களின் ஆதரவை வெளியிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் பல நாடுகளுக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் சிறப்புத் தூதரகப் பயணம் மேற்கொண்டு, இந்தப் பிரேரணையின் பொருட்டு இலங்கைக்கு ஆதரவினைத் திரட்டி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Responses to அமெரிக்காவின் எந்தவிதமான பிரேரணையும் வெற்றிகொள்ளப்படமாட்டாது – சிறிபால டி சில்வா