ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள தீர்மானத்தில் அடங்கியுள்ள கடுமையான விடயங்களைத் தணிப்பதற்கான முயற்சிகளாகவே
இலங்கை அரச தூதுக்குழுவின் தென்னாபிரிக்காவுக்கான பயணம் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மோதல்கள் முடிவுற்ற நிலையில் இலங்கையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தென்னாபிரிக்கா அக்கறை கொண்டுள்ளது. ஆனாலும், இலங்கை அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்க அரச பிரதிநிதிகள் பல தடவைகள் இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் இலங்கை அரச தூதுக்குழு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஆகியன தனித்தனியாக தென்னாப்பிரிக்கா சென்றுவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் காட்டத் தவறியபடியாலேயே தென்னாப்பிரிக்காவின் ஈடுபாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த பொதுநலவாய மாநாட்டின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பிரகாரம் இலங்கைக்கு உதவ முன்வந்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துச் சென்றதாக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
ஆனாலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று வரவுள்ள சூழ்நிலையில், 'இன்னொரு நாடொன்றின் அனுசரணையுடன் நல்லிணக்க முயற்சிகள் நடப்பதாக சர்வதேசத்துக்கு காட்டும் முயற்சியாகவே' தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கை அரச தூதுக்குழு சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எது எவ்வாறாக இருந்தாலும், தென்னாப்பிரிக்காவின் பங்களிப்புடன் நடக்கும் இணக்க முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீணாக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், தென்னாப்பிரிக்கா ஊடான முயற்சிகளில் நன்மை உள்ளவரை அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆனால், சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காது என்று எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அமெரிக்கத் தீர்மானத்தின் கடும் தன்மையைக் குறைப்பதற்கு இலங்கை அரசு முயற்சி - எம்.ஏ.சுமந்திரன்