Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல் காலங்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டு காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீடித்துள்ளார்.
காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலம் கடந்த 17ஆம் திகதியோடு முடிவுக்கு வந்திருந்தது. அதனையடுத்தே, விசாரணைகள் இன்னமும் முடியாத நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கும் உத்தரவு ஜனாதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாட்டின் அனைத்துத் பிரதேசங்களிலிருந்தும் 16,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனையடுத்து, விசாரணைகளுக்கான சாட்சியங்களைப் பதியும் நடவடிக்கை கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் நிறைவடைந்துள்ளன.

எதிர்வரும் காலத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும், கிழக்கு மாகாணத்தில் பகுதிகளிலும் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. ஆனால், அவற்றுக்கான திகதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

0 Responses to காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com