Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 31.03.2014

பதிந்தவர்: தம்பியன் 31 March 2014

மேஷம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். ஊர் மாற்றம், இட மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உறவினர்களால் சிறு விரயம் ஏற்படலாம். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

ரிஷபம்
வருமானம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

மிதுனம்
வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கட்டிடம் கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

கடகம்
சாதனை படைக்கும் நாள். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்துதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தந்தை வழியில் தனலாபம் வந்து சேரும். மாலை நேரம் பயணத்தால் பலன் உண்டு.

சிம்மம்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.

கன்னி
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். வெளியூர் பயணமொன்றால் பலன் கிட்டும்.

துலாம்
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். பண வரவு திருப்தி தரும்.

விருச்சகம்
பண வரவு திருப்தி தரும் நாள். வி.ஐ.பிக்கள் வீடு தேடி வருவர். விரும்பிய காரியத்தை விரும்பிய படியே செய்து முடிப்பீர்கள். தொழிலுக்கு உறுதுணை தரும் விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும்.

தனுசு
தொழிலில் இருந்த குழப்பங்கள் அகலும் நாள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தாய் வழியில் தனலாபம் கிடைக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்
சவால்களைச் சமாளிக்க வேண்டிய நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கனவுத் தொல்லை அகலும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வழிச் சச்சரவு அகலும்.

கும்பம்
தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும் நாள். வெளி வட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மற்றவர்கள் நலன் கருதி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

மீனம்
சுபச்செய்திகள் நாள். வெளியுலகத் தொடர்பில் சற்று கவனம் தேவை. முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. திடீர் பயணத்தால் திசை திருப்பம் ஏற்படலாம். மாலை நேரம் சிறு விரயம் உண்டு.

0 Responses to இன்றைய ராசி பலன் | 31.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com