Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேசத்துடன் ஒத்துழைத்து மீளமைப்பு செயற்பாடுகளை மேற்கொண்டால் மாத்திரமே இலங்கையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பிரான்ஸின் கொழும்பில் உள்ள தூதுவர் ஜீன் போல் மோன்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அவர் வடமாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில், தமது விஜயம் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறார்.

இதில் இலங்கையின் மீளமைப்பு நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதற்கு, சர்வதேசத்துடன் இயைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to சர்வதேசத்துடன் ஒத்துழைப்பு மற்றும் மீளமைப்பே ஐக்கியத்தை ஏற்படுத்தும் - பிரான்ஸ் தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com