ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் தமக்கு எதிராக எந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நீடித்து வந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து தாம் பொறுப்புடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மோதல்கள் முடிவுக்கு வந்து நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது. பொருளாதார அபிவிருத்தியும் முன்னோக்கி செல்கிறது. இவ்வாறான நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன. அதனொரு கட்டமாகவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் எமக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவர எத்தனிக்கின்றனர். ஆனால், அந்தத் தீர்மானங்களை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எமக்கு எதிரான எந்தத் தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: இலங்கை அரசாங்கம்