Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழ் கலாசார பாராம்பரியத்தை முற்றாக அழிப்பதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளையும், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்அடிப்படையில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அரசாங்கத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையின்படி, தமிழ் வரலாறு, தமிழ் கலாசாரம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கட்டாய பாடமாக மாற்றவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தேசிய கீதம் சிங்கள மொழியிலேயே இசைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழ் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு நடவடிக்கை! பாடசாலைகளில் நிகழ்வுகளுக்குத் தடைவிதிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com