நாட்டை இரண்டாகப் பிரித்து சிங்கள மற்றும் தமிழ் மாநிலங்களை அமைக்க முயற்சிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிங்கள ராவய என்கிற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிங்கள ராவய அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அந்த அமைப்பின் முக்கியஸ்தரான மாகல்கந்தே சுதந்த தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபையில் அண்மையில் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைபுக்கான யோசனையானது நாட்டை மீண்டும் யுத்த சூழ்நிலைக்குத் தள்ளக்கூடிய வகையிலும், இரத்த ஆறு மீண்டும் ஓடச் செய்யும் வகையிலும் அமைந்திருக்கின்றது.
நாட்டைப் பிரிக்கும் இந்த யோசனைக்கு சிங்கள ராவய அமைப்பு ஒருபோதும் உடன்படாது என்பதோடு முற்றாக அதனை எதிர்க்கின்றோம். இவ்வாறானதொரு யோசனையை முன்வைத்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் நீதியரசர் என்பதோடு, அரசமைப்பு பற்றியும் அறிந்தவர். எனினும், இந்த யோசனையை முன்வைத்ததன் மூலம் அவர் அரசமைப்பை மீறிச் செயற்பட்டுள்ளார். எனவே, கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய குற்றத்தை அவர் செய்திருக்கின்றார். இந்தநிலையில், அவர் உடன் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று துப்பாக்கி முனை மூலம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். அதே கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசியல் ஊடாக முன்வைத்து வருகின்றது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளான விக்னேஸ்வரனும், சம்பந்தனும் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.
அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை நாட்டவர்களுக்கும் சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். இருப்பினும், இரா. சம்பந்தன் தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் மட்டும் தலையீடு செய்கின்றார். சிங்களவர்களை அவர் கண்டுகொள்வதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையையும் அவர் நியாயப்படுத்துகின்றார்.
அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற அவரது பேச்சில் இது புலப்பட்டது. சிங்களவர் ஒருவர் எமக்கு எதிர்க்கட்சித் தலைவராக இல்லாதிருப்பதே இதன் பிரதான பிரச்சினை. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இரா. சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி இடங்கொடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மாநிலம் அமைக்க முயற்சிக்கும் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்: சிங்கள ராவய