வவுனியா அல்காமிய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றிய கார்த்திகேசு நிரூபனின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை முன்வைப்பதினூடு மட்டுமே நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நிரூபனின் கொலை தொடர்பில் பொலிஸார் சீரான விசாரணைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டி நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வவுனியா காட்டுமாங்குளம் அல்காமியா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கார்த்திகேசு நிரூபன் வடமாகாணசபைக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக முதல்நாள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் முறைப்பாடு செய்யப்பட்டும் அவரைக் கண்டுபிடிப்பதற்கான எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி அன்று ஏ-9 வீதியில் 225-226ஆவது மைல்கல்லுக்கு இடைப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டை காணாமல் போய் கொலைசெய்யப்பட்ட ஆசிரியரது சகோதரி தனது சகோதரன் என்று அடையாளம் காட்டியுள்ளார்.
முறைப்பாடு கிடைத்தவுடன் பொலிஸார்; விரைந்து செயற்பட்டிருந்தால் ஒருவேளை அவரது கொலையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.
ஆசிரியர் கடத்தப்பட்ட சில தினங்களிலேயே வவுனியாவில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்தப்பட்டிருந்தது. அதன் பிறகும் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு ஆசிரியர் என்பதற்கும் அப்பால் இந்நாட்டின் ஒரு குடிமகன் என்ற வகையில் அவர் தனக்கு உரித்துடைய வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றச் சென்றது கடத்தப்பட்டு கொலைசெய்யுமளவிற்குக் குற்றமுடையதா? எத்தகைய குற்றத்தையும் கண்டுபிடிக்கும் ஆற்றலுடையவர்களாக மகுடம் சூட்டிக்கொள்ளும் எமது காவல்துறையினரால் இதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது.
ஏற்கனவே வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் பூபாலசிங்கத்தின்; புதல்வரும் ஆசிரியருமான உதயகுமார் என்பவரும் வவுனியாவில் வைத்துக் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை அவருக்கென்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. இவ்வாறு ஆசிரியப் பெருமக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டிருப்பது வடக்கு-கிழக்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் கொலைசெய்யப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்டிருக்கின்றார். மற்றவரின் நிலை இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நாட்டின் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்த வேண்டிய கல்விச் சமூகம் இத்தகைய மூர்க்கமான நடவடிக்கைகளினால் நிலைகுலைந்துபோயுள்ளது. தங்களுடைய பணிகளை முன்னெடுத்துச் செல்வதே அவர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. யாரிடம் முறையிடுவது? முறையிட்டால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அச்சத்தில் உறைந்துபோயுள்ளது.
ஒரு அரச ஊழியருக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நிலைக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது? இந்நாட்டின் அரசாங்க உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கு இந்த அரசாங்கம் என்ன உத்தரவாதத்தை வழங்கப்போகின்றது?
ஆசிரியர் நிரூபனின் அகால மரணத்திற்கு எனது சார்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆசிரிய சமூகத்தினருக்கும் கல்விச் சமூகத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேற்படி சம்பவங்கள் உள்நாட்டில் நடத்தப்படும் எத்தகைய விசாரணைகளும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட எமக்கு நீதியை வழங்காது என்பதை நன்கு புலப்படுத்துகின்றன என்பதுடன் எமது பிரச்சினைகளைச் சர்வதேசத்திடம் முறையிட்டு பக்கசார்பற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றினூடாக மட்டுமே தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நிரூபிக்கின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக எமது உண்மையான விடியல் என்பது எமக்கான நியாயமான அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளது.
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தால் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவினை வழங்கும் எனவும் கல்விச் சமூகமும் ஒன்றினைந்து ஆதரவு வழங்க வேண்டும்” என்று சிவசக்தி ஆனந்தன் கோரியுள்ளார்.

0 Responses to ஆசிரியர் நிரூபனின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: சிவசக்தி ஆனந்தன்